கண்ணே, கண்மணியே, கண்வளராய்!

இந்த அழகான தாலாட்டுப்பாட்டைப் பார்க்கலாமா?

கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே
பூத்த புதுமலரே, பொக்கிஷமே, கண்மணியே, கண்வளராய்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

யாரடித்தா நீ அழுதாய், அழுதகண்ணில் நீர் ததும்ப,
பேருரைத்தால் நான், பெருவிலங்கு பூட்டிடுவேன்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

அத்தை அடித்தாளோ, உனக்கு அமுதூட்டும் கையாலே
சற்றே மனம்பொறுத்து சந்திரனே கண் வளராய்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

பாட்டி அடித்தாளோ, உனக்கு பால் வார்க்கும் கையாலே
கூப்பிட்டு நான் கேட்பேன், குஞ்சரமே கண் வளராய்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

மாமி அடித்தாளோ, உனக்கு மை தீட்டும் கையாலே
சாமி, மனம் பொறுத்து, சண்முகனே கண் வளராய்!
(சாமி, மனம் பொறுத்து, அம்பிகையே கண் வளராய்!)

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

தமையன் அடித்தானோ, உன்னை தயிரூட்டும் கையாலே
நிமிடம் மனம் பொறுத்து நித்திரை செய் கோமகனே!
(நிமிடம் மனம் பொறுத்து நித்திரை செய் பூமகளே!)

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

அக்காள் அடித்தாளோ, உன்னை அம்மான்மார் வைதாரோ
விக்கவே தேம்புவதேன் வித்தகனே கண் வளராய்!
(விக்கவே தேம்புவதேன் வித்தகியே கண் வளராய்!)

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

பெற்றோர் அடித்தாரோ அறியாமல் செய்தாரோ
எங்கள் ஆரமுதே கண்வளராய்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

அழாதே, அழாதே! எங்கள் அரசே நீ
தொழுவார் பலர் இருக்க துரையே நீ கண் வளராய்!
(அழாதே ,அழாதே! எங்கள் அரசி நீ
தொழுவார் பலர் இருக்க தூயவளே நீ கண் வளராய்!)

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

(அடைப்புக் குறியில் இருப்பவை, பெண் குழந்தைக்கான மாற்றங்கள்!)

பாடுபவர்: திருமதி. பாம்பே ஜெயஸ்ரீ

Advertisements

4 பின்னூட்டங்கள்

Filed under இசை, தாலாட்டு

4 responses to “கண்ணே, கண்மணியே, கண்வளராய்!

 1. ராகவன்

  அருமையான தாலாட்டு.. என் ஐபாட் ல் பதிந்து வைத்துள்ளேன்.. நான் அடிக்கடி பார்க்கும் முக்கியமான வீடியோவில் இதுவும் ஒன்று. நம்மை உருக வைக்கும் பாடல். நன்றி ஜீவ்ஸ்.

 2. மதுரையம்பதி

  நல்ல பாடல் ஜீவா. எம்.எல்.வி அவர்கள் பாடி வெளிவந்துள்ள தாலாட்டுப் பாடல்கள் என்ற தலைப்பிலான CDயில் இந்த பாடலும் இருக்கிறது. இன்று ஜெயஸ்ரீ பாடியிருப்பதை அறிகிறேன். வீட்டுக்குப் போய் கேட்கிறேன் 🙂

 3. vyasamoorthy

  I was searching for info on how to send SMs in Tamil and came across your wonderful site. Thanks for Aararo Areeraro thaalattuppaadal. I am yet to learn how to use Tamil fonts to send comments. Thanks a lot. You made my day.

 4. ஆஹா இந்தப்பாட்டத்தான் தேடு தேடுன்னு தேடிகிட்டு இருந்தேன் :-)))
  நன்றி ஜீவ்ஸ்ணா :-))))

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s