ஆபோகியில் அகமுருகி

ஆபோகி ராகத்தினைப் பற்றி அரிய ஆர்வமுள்ளவர் விக்கிபீடியாவிற்கு விஜயம் செய்யவும்.

தமிழ் திரையில் ஆபோகி ராகத்தில் வந்த சில திரை இசைப் பாடல்கள் இங்கே:

தங்கரதம் வந்தது வீதியிலே/ Dr பாலமுரளி கிருஷ்ணா, P சுசீலா / கலைக்கோவில் / MS விஸ்வநாதன்

thangarathamvanthathu
Hosted by eSnips

காலை நேர பூங்குயில் / S ஜானகி, SPB / அம்மன் கோயில் கிழக்காலே /இளையராஜா

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே / வாணி ஜெயராம், ஜெயசந்திரன் / வைதேகி காத்திருந்தாள் / இளையராஜா

இந்த பாடலின் ஸ்வரங்களை இங்கே பார்க்கலாம்.

சமீபத்திய படங்களைல் சந்திரமுகி படத்தில் வித்யாசாகர் இசையில் “கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்” பாடலும் இந்த ராகத்தின் சாயலில் இருக்கிறதென்பார். ஆனால் ‘நி’ ஸ்வரம் அதிகமாக இருப்பதால், ஸ்ரீரஞ்சனியும் இதில் இருக்கிறது எனலாம்.

திரைப்பாடல்கள் தருவது கொஞ்ச நேரம் – கொஞ்சம் இன்பம் தான், ஆபோகியின் அகமுருக்கும் பேரின்பத்தைனை செவியில் பருகிட நீங்கள் இந்த ராகத்தில் கீர்த்தனைகளைக் கேட்க வேண்டும்.

முதலில்:
சபாபதிக்கு வேறு தெய்வம் / கோபாலகிருஷ்ண பாரதியார் / மாண்டலின் U ஸ்ரீநிவாஸ்

Sabapathikku
Hosted by eSnips

மேலே கேட்ட பாடலுடன் தொடர்பாக, சுவையான சம்பவம் ஒன்று: இந்த பாடலை பாடிய கோபால கிருஷ்ண பாரதியும், தியாகராஜரும் சமகாலத்தவர்கள். முதன்முறை இருவரும் சந்தித்தபோது:

கோபாலகிருஷ்ண பாரதி: ஸ்வாமிகளுக்கு வணக்கங்கள்!

தியாகராஜர் : ஆஹா, நீங்கதான் ‘நந்தனார் சரித்திரம்’ இயற்றிய கோபால கிருஷ்ண பாரதியா, உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி!

கோபாலகிருஷ்ண பாரதி: தங்களை சந்தித்தது என் பாக்கியம்.

தியாகராஜர் : எல்லோரும் உங்கள் கீர்த்தனைகளை மிக உயர்வா சொல்கிறார்கள், ஆபோகி ராகத்தில் ஏதேனும் கீர்த்தனை செய்திருந்தால் கொஞ்சம் பாடிக் காட்டுங்களேன்.

கோபாலகிருஷ்ண பாரதி: அடடா, அந்த ராகத்தில் ஏதும் இயற்றவில்லையே!.

என்றபின் காவிரியில் போய் நீராடிவிட்டு வந்தபின் தியாகராஜருக்கு முன் பாடுகிறார்:

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ – தில்லை
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ?

கிருபாநிதி இவரைப்போல கிடைக்குமோ இந்த பூமிதன்னில்?
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ?

ஒருதரம் சிவ சிதம்பரம் என்று சொன்னால் போதுமே
பரகதி பெற வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா?

அரிய புலையர் மூவர் பாதம் அடைந்தாரென்று புராணம்
அறிந்து சொன்ன கேட்டோம் கோபாலகிருஷ்ணன் பாடும் தில்லை
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ?

அதுவும் “ராமா நீ சமானம் எவரு?” என்று பாடிய தியாகராஜர் முன்பாவாகவே!
பாடலைக் கேட்டு தியாகராஜரும் பாரதியை பாராட்டி தானும் அதே ராகத்தில் ‘மனசு நில்ப சக்திலேகபோதே’ என்ற பாடலை இயற்றினாராம்!

அடுத்ததாக:

நெக்குருகி உன்னைப் பணியா கல்நெஞ்சன்/ பாபநாசம் சிவன் / நித்யஸ்ரீ மஹாதேவன்

03 Nekkuruhi-Main
Hosted by eSnips

இந்த பாபநாசம் சிவனின் ஆபோகி ராகக் கீர்த்தனையில் நெக்குருகிப் பாடினால், முருகனருள் முன்னிற்காதோ!

இந்த கீர்த்தனையில் ஸ்வர சஞ்சாரங்கள் அலாதி திருப்தி அளிப்பவை. குறிப்பாக –

ரீ ரி க ம க ரி ஸா – ரி க மா மா

த ஸ் த த மா – க ம த ஸ்ா

ரி ஸ்ா ம க ரி …

நீங்களே கேட்டுக் களியுங்கள்:

Nekkuruhi-Swarams
Hosted by eSnips
Advertisements

1 பின்னூட்டம்

Filed under ஆபோகி ராகம், இசை, Ragam

One response to “ஆபோகியில் அகமுருகி

  1. Pingback: தஞ்சம் - நெஞ்சம் - வஞ்சம் - வன்மம் « இசை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s