ஜெயா டி.வி யில் மார்கழி மகோற்சுவம்

வருடா வருடம் மார்கழி மகோற்சுவம் ஜெயா டி.வி யில் சிறப்பாக நடந்தேறும். அமெரிக்காவில் இங்கே ஒளிபரப்பு இல்லாததால், இந்த வருட நிகழ்சிகளை பார்க்க இயலவில்லை. ஆனால் இசை ரசிகர்களில் தயவினால், இந்நிகழ்சிகளில் சில சேமிக்கப்பட்டு இணையத்தில் கேட்க கிடைக்கிறது. நீங்களும் இங்கே சென்று கேட்கவோ, தரவிறக்கம் செய்துகொள்ளவோ இயலும்.

ஓவ்வொரு கலைஞரும் ஒரு சிறப்பு தீம் எடுத்துக்கொண்டு பாடுவது சிறப்பு.
எல்லா கச்சேரிகளும் சிறப்பாக இருந்தன.

பிடித்த பாடல்களில் சில:
சுதா ரகுநாதன் – நீராஜனம்
நெய்வேலி சந்தானகோபாலன் – மதியால் வித்தகனாகி (திருப்புகழ்)
ப்ரியா ஸிஸ்டர்ஸ் – ஸ்ரீரங்கநாத குருசேவை
உன்னி கிருஷ்ணன் – பெற்ற தாய் தனை, விஸ்வேஸ்வர தரிசனு
ரஞ்சனி -காயத்ரி – அம்பரமே தண்ணீரே (திருப்பாவை)

இடையிடையே இரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களும் சுவாரஸ்யமாக இருந்தன.

பிடித்தவற்றில் சிலவற்றை தொகுத்துள்ளேன்:
கேள்வி: இருபது வருடங்களுக்கு முன் நீங்க பாடிய விதத்திற்கும் அப்படியே நிறைய மாறி இருக்கிறதே?
நெய்வேலி சந்தானகோபாலன்: எங்க குருநாதர் பெரிய மேரு மலையா இருந்தார். அவர் இருக்கிற வரை, அவரோட விஸ்வரூப தரிசனம் எப்பவுமே கிடைத்துக்கொண்டு இருந்ததிலே அப்படி இருந்தது. அப்புறம் நானும் பாடணும்னு வந்தபோது – நமக்கு சுவாமி என்ன கொடுத்து இருக்கிறார் – அவர் கிட்டே இருந்து நாம என்ன எடுத்துக்கொண்டு இருக்கோம் அப்படீன்னு ஆராய்ந்து ஆராய்ந்து – உள்ளே உள்ளே போய் வெளிய வரும்போது – ஒரு Simplicity – என்னோட natureக்கு தகுந்த மாதிரி ஒரு சங்கீதத்தை எடுத்துண்டுட்டேன்னு நினைக்கிறேன். இன்னும் ஒண்ணு, கேட்க வேண்டும் என்று நீங்களெல்லாம் இவ்வளவுதூரம் வந்திருக்கீங்களே – உங்களுக்கும் புரியணும்னு ஆசையா இருக்கு.

கேள்வி: சில பாடல்கள் மட்டும் ஏன் All time Greats ஆக இருக்கு?
ப்ரியா ஸிஸ்டர்ஸ்: அந்த பாடல்கள் பாடல் வரிகள் – சாகித்யம் simple ஆக இருக்கறதினால.

கேள்வி: இரண்டுபேர் சேர்ந்து, ராகத்தோட ஆலாபனை பண்ணறீங்க, ஆனால் ஆலாபனைங்கறது personal மனோதர்மம் இல்லையா – அதை எப்படி இரண்டு பேர் சேர்ந்து செய்ய முடியுது?
ப்ரியா ஸிஸ்டர்ஸ்: மனோதர்மம்-னு வரும்போது – தனித்தனியா – ராகம் பாதிப்பாதி பாடறோம் – நிரவல் ஒருத்தர் பாடினதுக்கு அப்புறம் இன்னொருவர் பாடறோம் – அதனால் சேர்ந்து பாடறதில்லை – மனோதர்மம் அவங்க அவங்க தனித்தனிதான்.

கேள்வி: ஒரு சச்சேரி எப்போது வெற்றிகரமானதுன்னு தெரியும்?
உன்னி கிருஷ்ணன்: தனி அவர்த்தனத்திற்கு அப்புறம், நல்ல ஒரு கிரஸண்டோவில் போய் முடியும்போது சொல்லலாம். ஆனால், கச்சேரி பாடிக்கொண்டு இருக்கும்போது இதைப்பற்றியெல்லாம் நினைப்பது கடினம். முடிந்த அப்புறம்தான் யோசிக்க முடியும். பாடகர் ஒரு inspiration உண்டாக்கி இருந்தால், வெற்றிகரமான கச்சேரி என்று சொல்லலாம்.

முடிவுரையில் ரஞ்சனி – காயத்ரி: ஆயிரக்கணக்கான இசை ரசிகர்களுக்கு டிசம்பர் சீசன் படு குஷி. ஆன, லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான – வர இயலாத ரசிகர்களுக்கு ஜெயா டி.வி வழியா இசை போய் சேரரது – அவர்களுக்கு மார்கழி மகா உற்சவம் – மெகா படு குஷி. மற்ற கச்சேரிகளை கவர் பண்ணறதைக்காட்டிலும் தாங்களே விழா நடத்துவது சிறப்பு. இப்போவெல்லாம், டிசம்பர் சீசன்ல பாடறீங்களான்னு கேக்கறாங்களோ இல்லையோ, ஜெயா டி.வி யில் பாடறீங்களான்னு கேக்கறாங்க!

Advertisements

6 பின்னூட்டங்கள்

Filed under இசை, ஜெயா டி.வி, jaya tv, Music

6 responses to “ஜெயா டி.வி யில் மார்கழி மகோற்சுவம்

 1. johan paris

  ஜீவா!
  தாங்கள் தந்த இணைப்புக்குச் சென்றேன். ரொம்ப வருத்தப்படுது; இப்போ இலவச இணைப்புத் தர வசதியில்லையாம்.நமக்கும் கட்டண இணைப்புக்குப் போகும் நோக்கமில்லை. இது ஒரு வகையான போட்டுப்பிடிப்பு விளையாட்டு.
  நிற்க! மகோற்சவமா? மகோற்சுவமா???
  இவ்விடயங்கள் விகடனில் படித்தேன். ஜெயாவை புகழ்ந்தே எழுதியிருந்தார்கள்

 2. வருக யோகன்,
  அப்படியா? நான் இப்போது அந்த பகுதிக்கு சென்று பார்த்தேனே…என்னால் இலவசமாக இறக்கம் செய்ய இயல்கிறதே…
  பக்கத்தின் கீழ் பகுதிக்குச் சென்றால் ‘Download ….mp3’ என்ற சுட்டி தெரிகிறதா பாருங்கள்!

  நீங்கள் சொன்னபின் ‘மகோற்சவம்’ தான் சரியெனப் படிகிறது,நன்றி!
  ஆனால் ‘சவத்தை’க்காட்டிலும் ‘சுவம்’ சுவையாக இருக்கிறது. அந்த இனிமையில் மயங்கிவிட்டேன் போலும்!

 3. nagarajannatarajan

  Dear Jeeva:
  I accidentally accessed your site. Excellent site. How do I sign up for these Maragai Vizha Innisai site? I am a nuclear engineer, presently working at Seattle Washington. I am fully devoted to classical music. Keep up your good work..Best wishes. Natarajan/-

 4. Hello Mr. Nagarajan Natarajan,
  Its my pleasure to have you visit my blog.
  Its my small search in trying to learn the infinite pleasure of our great music, thats pretty much it. The walks of interested people like you can only enrich it!

  This post has link to a a website (www.sangeethapriya.org) where many carnatic listeners have uploaded many of their recordings from Radio, TV and Concerts.

  One such recording included the Jaya TV’s margazi magorchavam. It may not be complete, but something is better than nothing. Let me know if there is any problem in accessing the link or the website itself. Its all available free – without needing to register.

 5. nagarajannatarajan

  Jeeva:
  I did access that site on sangeethapriya.com. Like you mentioned they have few selected concerts from Jaya TV and many classical concerts of various artists both vocal and instrumental. You seems to be interested in Thirupugaz songs of Arunagirinathar. I presume you are a Muruga Bhakta too like me! I visited the site called Kaumaram which has many Thirupugaz songs sung by Guruji Raghavan. If you know any other site where I can listen to these Thirupugaz songs please let me know. Thanks again. Best regards.
  Na. Natarajan/-

 6. To Natarajan Sir,
  Yes, Kaumaram is very good site for Muruga Bkaktas.
  I havent seen many other sites with audio clips. If i find any, I will post here.

  You might have seen this blog of VSK Sir:
  http://aaththigam.blogspot.com/
  where you can find plenty thirupugaz explanation to read!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s