ஆனந்தபைரவியில் மூன்றாவது ஆனந்தம்

இரண்டு ரொம்பவே குறைச்சல் என்றபின் மூன்றாவதற்கு முனையாமல் இருக்க முடியாதல்லவா!

ஆனந்த பைரவி இராகத்தில் தொடர்ந்து மூன்றாவது கிருதி – கமலாம்பாள் அன்னையே – என்னைக் காத்து அருள்வாய்.

இப்பாடல் முத்துசாமி தீக்ஷிதரால் இயற்றப்பட்டது. கமலாம்பாள் நவ-ஆவரணக் கிருதிகளில் முதலாவது கிருதி. இந்தத் தொகுப்பில் இடம் பெறும் ஒவ்வொரு பாடலிலும் ஒரு ஸ்ரீசக்ர ஆவரணம் என ஒன்பது ஆவரணங்களையும் பாடுவதாக அமைத்துள்ளார்.

பல்லவி

கமலாம்பா3 ஸம்ரக்ஷது மாம்

ஹ்ருத்கமலா நக3ர நிவாஸினீ அம்பா31


அனுபல்லவி

ஸுமனஸாராதி4தாப்3ஜ முகீ2

ஸுந்த3ர மன:ப்ரியகர ஸகீ2

கமலஜானந்த3 போ3த4 ஸுகீ2

காந்தா தார2 பஞ்ஜர ஶுகீ

சரணம்

த்ரிபுராதி3 சக்ரேஶ்வரீ அணிமாதி3 ஸித்3தீ4ஶ்வரீ

நித்ய காமேஶ்வரீ

க்ஷிதி புர த்ரை-லோக்ய மோஹன சக்ரவர்தினீ

ப்ரகட யோகி3னீ

ஸுர ரிபு மஹிஷாஸுராதி3 மர்தி3னீ

நிக3ம புராணாதி3 ஸம்வேதி3னீ

த்ரிபுரேஶீ கு3ரு கு3ஹ ஜனனீ

த்ரிபுர ப4ஞ்ஜன ரஞ்ஜனீ

மது4 ரிபு ஸஹோத3ரீ தலோத3ரீ

த்ரிபுர ஸுந்த3ரீ மஹேஶ்வரீ

பாடல் வரிகளுக்கு உதவி சாகித்யம்.நெட்

ஸ்ரீசக்ரத்தின் அமைப்பு முறையினைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

ஸ்ரீசக்ரத்தின் முதலாவது ஆவரணமாகிய  த்ரை லோக்ய மோஹன சக்ரம் பாடற்பெருவதைப் பார்க்கலாம். இந்த சக்ரத்தின் தேவதை பூபுரம் எனப்படும். மேலும் விவரங்களுக்கு இத்தளத்தில் பார்க்கலாம்.

 

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஆனந்தபைரவி

ஆனந்த பைரவியில் ஆனந்தமான இரண்டு!

தியாகராஜர் “இராமா நீ சமானம் எவரு?” என்பார்,

கோபால கிருஷ்ண பாரதி “சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?” என்பார்,

ஷ்யாமா சாஸ்த்ரிகள் இந்த கிருதியில் குமார ஜனனியாம் உமையே – உனக்கு சமானம் எவரும் இல்லை என்கிறார்!

தஞ்சை பெரிய கோவிலின் பெருவுடையார் – பிரஹதீஸ்வரின் இடது பாகமாம் – பிருஹநாயகி அன்னையைப் பாடும் பாடலாகும் இது.

இப்பாடலை சௌம்யா அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


இராகம் : ஆனந்தபைரவி

தாளம் : ஆதி

இயற்றியவர்: ஷ்யாமா சாஸ்த்ரிகள்


பல்லவி

ஹிமாசல தனய ப்ரோசூடகிதி

மஞ்சி சமயமுராவே அம்பா

அனுபல்லவி

குமார ஜனனி சமானம் எவரு?

குமார ஜனனி சமானம் எவரிலனு

மானவதி ஸ்ரீ ப்ருஹநாயகி

சரணம்

உமா ஹம்ஸகமா! தாமசமா?

ப்ரோவ திக்கெவரு நிக்கமுகனு

மாகி இபுட அபிமானமு சூப

பாரமா சலமா வினுமா தயதோனு

சதா நத வர தாயகீ நிஜ

தாசூடனு ஷ்யாம க்ருஷ்ண சோதரி

கதா மொர வினதா துரித

நிவாரிணி ஸ்ரீ ப்ருஹநாயகி

தமிழில்:

இமயனின் புதல்வியே! காப்பதற்கு இதுவே

நல்ல சமயமே! வாராயோ? அம்பாள்!

குமாரனை ஈன்றவளே! உனக்கு நிகர் எவருமில்லை!

மதிப்பிற்குரிய பெரிய நாயகியே!

உமையே! அன்ன நடையாளே! தாமதமா!

காத்திட வழியேது? உறுதியாக

என்மீது இப்போது அன்பு காட்ட

கடினமோ? மலையோ? கேளாயோ? தயை காட்ட

எப்போதும் பணிபவர்க்கு வரம் அளிப்பவளே!

நான் நிஜ பக்தனம்மா!

நீ நீல கிருஷ்ணனின் சகோதரி அன்றோ!

நீ என் முறைதனைக் கேளாயோ!

பாவங்களைப் போக்குபவளே!

பெரிய நாயகியே!

———————————————-

ஆனந்த பைரவி இராகமானது, ஷ்யாமா சாஸ்திரிகளின் சொத்து எனச்சொன்னால், இப்பாடல் அதில் ஒரு இரத்தினம்.

எனினும் அனுபல்லவியில் மானவதி எனும் ஐந்தாவது மேளகர்த்தா இராகத்தின் பெயர் வருவதைக் கவனிக்க. ஒருவேளை தற்செயலோ?

பல்லவி, அனுபல்லவி மற்றும் முதல் சரணத்தில் எத்தனை எத்தனை “மா” வருகிறது சாகித்யத்தில் என்று பார்க்க!

ஹிமாசல

குமா

மானம்

மானவதி

மா

ஹம்ஸகமா

தாமசமா

மாகி

அபிமா

பாரமா

சலமா

வினுமா


அப்பாடா! இத்தனை “மா” போதுமா?

அடுத்த சரணத்திலோ, “மா” வில் இருந்து “தா”விற்கு தாவினதோ?

தா

தாயகீ

தாசூடனு

தா

வினதா

துரி


——————————————————————————————-

மேற்சொன்ன பாடல் பிரஹநாயகி அம்பாளின் மீது என்றால்,

அடுத்த பாடல் பிரகதீஸ்வரர் மீதானது.

இடப்பக்கத்தில் இருந்து அடுத்து வலப்பக்கத்திற்கு!

இராகம் : ஆனந்தபைரவி

தாளம் : ஆதி

இயற்றியவர்: தஞ்சை சிவானந்தம்

எடுப்பு

காப்பதுவே உனது பாரம்

தொடுப்பு

வாய்ப்பதுவே உனது அருள்

வையகத்தில் வாழச் செய்து

(சிட்டை ஸ்வரம்)

முடிப்பு

இன்பதென்பது அறியாத ஏழை

எனை மறந்திடாமல்

நின் புகழைப் பாடிடவே

நெஞ்சில் உறை தஞ்சை பிரகதீசா!

(சிட்டை ஸ்வரம்)

பின்னூட்டமொன்றை இடுக

Filed under ஆனந்தபைரவி

காம்போதியில் மனங்கவர் இரண்டு!

இங்க பார்க்கப் போகிற இரண்டு பாடல்களும் ஒரே ராகம் தான். இரண்டுமே காம்போதி இராகம் தான். இரண்டு பாடல்களை இயற்றியவரும் ஒருவர் தான் – பாபநாசம் சிவன் அவர்கள்.

இந்த இரண்டு பாடலிலும் “இராமதாசன்” அல்லது “சௌரிராஜன்” ஆகிய அவருடைய இயற்றியவர் முத்திரைகளைக் காணோம்.  ஆனா இந்த பாடல்களில் சொல்நயம் தான் எவ்வளவு அருமையாக அமைஞ்சு இருக்கு!  இரண்டு பாடல்களிலும் சரளமான சொல்லாடல்கள் வந்து விழுந்திருக்கு!

முதல் பாடல்:

எடுப்பு

ஆடும் தெய்வம் நீ அருள்வாய்

இடது பாதம் தூக்கி (ஆடும்)

தொடுப்பு

நாடும் அடியர் பிறவித் துயரற

வீடும் தரும் கருணை நிதியே  நடம் (ஆடும்)

முடிப்பு

சுபம் சேர் காளியுடன் ஆடிப் படு தோல்வி அஞ்சி

திருச் செவியில் அணிந்த மணித்தோடு விழுந்ததாக 

மாயம் காட்டியும் தொழும் பதம் உயரத் தூக்கியும் – விரி

பிரபஞ்சம் முழுதும் ஆட்டும்  நின் திருப் பதம்  

தஞ்சம்  என உன்னை அடைந்தேன்

பரிந்தென் திண்டாட்டம் கண்டு பரிசு தரும் துரையே 

சபை நடுவில் தத்திமி என்று (ஆடும்)

உக்கர கோலத்தில் உலகை உலுக்கும் காளியுடனான ஆட்டத்தில்

ஊர்த்துவ தாண்டவம் காட்ட திருச்செவி வரை தூக்கிய  காலானது!

எப்போதும் விரிந்து கொண்டே இருக்கும் இப்பிரபஞ்சம் முழுதையும் ஆட்டுவிக்கும் ஈசனது திருப்பாதமானது!


இப்பாடலை சஞ்சய் சுப்ரமணியன் பாடிட இங்கு கேட்கலாம்:

அடுத்த பாடல் :

எடுப்பு

காணக் கண் கோடி வேண்டும்- கபாலியின் பவனி

காணக் கண் கோடி வேண்டும் (காணக்)


தொடுப்பு

மாணிக்கம் வைரம் முதல் நவரத்னாபரணமும்

மணமார் பற்பல மலர் மாலைகளும் முகமும்

மதியோடு தாராகணம் நிறையும் அந்தி

வானமோ கமலவனமோ என மனம்

மயங்க அகளங்க அங்கம் யாவும்-

இலங்க அபாங்க அருள் மழை பொழி பவனி (காணக்)


முடிப்பு

மாலோடையன் பணியும் மண்ணும் விண்ணும் பரவும்

மறை ஆகமன் துதிக்கும் இறைவன் அருள் பெறவே

காலம் செல்லுமுன் கனதனமும் தந்தார்க்கு நன்றி

கருதிக் கண்ணாரக் கன்டுள்ளுருகிப் பணியப் பலர்

காண அறுமுகனும் கணபதியும் சண்டேச்வரனும்

சிவகணமும் தொடரக்கலை

வாணி திருவும் பணி கற்பக நாயகி

வாமன் அதிகார நந்தி சேவைதனைக் (காணக்)


களை நிறை திருக்கபாலி மயிலை வீதிகளில் பவனி வரும் காட்சியானது 

கண்ணாறக் கண்டாலும் போதாது, கண்ணாயிரம் இருந்தாலும் போதாது. 

பாபநாசம் சிவனின் வர்ணனை தான் என்னே!

தரித்த பிறை மதியோடு, விண்மீன் கூட்டங்களையும் காண –

இது என்ன அந்தி வானமோ என மயங்கியதில் விந்தை இல்லை.

கணபதி முதல் சண்டிகேஸ்வரர் வரை சிவகணங்கள் தொடர கற்பகாம்பாளுடன் பவனி வரும் காட்சியைப் இப்பாடலில் அழகாகப்

பதிவு செய்திருக்கிறார்!


இப்பாடலை மதுரை மணி ஐயர் பாடிட இங்கு கேட்கலாம்:

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

சங்கரி சம்குரு சந்தரமுகி

நவராத்ரி என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் கிருதிகளில் ஒன்று சாவேரி இராகத்தில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரி அவர்களின் “சங்கரி சம்குரு சந்தரமுகி” ஆகும். மிகவும் இனிமையானதும் நெகிழ்ச்சியைத் தரக் கூடியதுமான இப்பாடலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

பஞ்ச பூத தலங்களில் நீருக்கு உரிய தலமாம் திருவானைக்காவலில் வீற்றிருக்கும் அம்பிகையாம் அகிலாண்டேஸ்வரியைப் பாடும் பாடல்.

இராகம் : சாவேரி

தாளம்: திஸ்ர நடை

இயற்றியவர்: ஷ்யாமா சாஸ்திரிகள்

பல்லவி:

சங்கரி சம்குரு* சந்தரமுகி அகிலாண்டேஸ்வரி

சாம்பவி சரசிஜ பவ வந்திதே கௌரி அம்பா

(*சம்குரு/சங்குரு)

அனுபல்லவி:

சங்கட ஹாரினி ரிபு விதாரிணி கல்யாணி

சதா நட பலதாயிகே ஜகத் ஜனனி

சரணம்:

ஜம்புபதி விலாசினி ஜகதவனோலாசினி

கம்பு கந்தரே பவானி கபால தாரிணி சூலினி

அங்கஜ ரிபு தோஷிணி அகில புவன போஷிணி

மங்களபிரதே ம்ருதானி மராள சன்னிபவ காமினி

ஷ்யாமகிருஷ்ண சோதரி ஷ்யாமளே சாதோதரி

சாமகான லோலே பாலே சதார்தி பஞ்சன சீலே.

பொருள்:

குளிர் நிலவினை முகமாகக் கொண்ட சங்கரி – சங்கரனின் துணைவி

சம்குரு – நலங்களை எமக்கு வழங்கிடு,

அகில உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரி – மனதுக்கு இயைந்த இறைவி – அகிலாண்டேஸ்வரி.

சாம்பவி – சாம்புவின் துணைவி.

தாமரைப் பூவில் அமர்ந்த பிரம்மாவால் வணங்கப்படும் கௌரி.

சங்கட ஹாரினி – சங்கடங்களை அழிப்பவள். துயர் துடைப்பவள்.

எப்போதும் (சதா) வேண்டும் (நட) அன்பர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவள்.

ஜகத் ஜனனி – உலகங்களை ஈன்றவள், தாயானவள். கல்யாணி,

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் துணைவி.

ஜகத் +அவன + விலாசினி = உலகங்களைக் காப்பத்தில் மகிழ்பவள்.

சங்கினை (கம்பு) ஒத்த கழுத்தினைக் கொண்டவள். சக்தியின் மூலமானவள்.

பவானி! கபலாத்தினை ஏந்தியவள். சூலினி – சூலத்தினை ஏந்தியவள். உக்ர தேவதையாய் இருந்த அகிலாண்டேஸ்வரியை, ஸ்ரீசக்ர பிரதிஷ்டை மூலமாக ஆதி சங்கரர் சாந்தப்படுத்தியாக சொல்லப்படுகிறது.

மன்மதனின் எதிரியாம் சிவனின் மனதிற்கு உகந்தவள்.

அகில உலகங்களையும் போஷிப்பவள் – பேணுபவள்.

மங்களங்களைத் தருபவள்.

ம்ருதானி – மிருடனின் (கருணையுடையவன்) – சிவனின் துணைவி.

மராள (அன்னம்) சன்னிபவ காமினி – அன்னம் போன்ற நடையை உடையவள். லலிதா சகஸ்ரநாமத்தில் 47வது நாமம்.

ஷ்யாம கிருஷ்ணனின் சகோதரி. ஷ்யமாளா என வழங்கப்படுபவள்.

சதோதரி – மெல்லிய(சாத) இடையை(உதரி) உடையவள். இமவானுக்கு ‘சதோதரன்’ என்றோரு பெயருண்டு. இமவானின் மகளாதலால் சதோதரி எனவும் கொள்ளலாம். லலிதா சகஸ்ரநாமத்தில் 130வது நாமம்.

சாம கானத்தினை கேட்டு மகிழும் பாலே – பாலா திரிபுரசுந்தரி. லலிதா சகஸ்ரநாமத்தில் 965வது நாமம்.

எப்போதும் அன்பர்களின் துயர் துடைப்பதில் நாட்டம் உடையவள்.

சங்கரியே எப்போதும் நலங்களை எமக்கு வழங்கிடு,

—————

இப்பாடலை கேட்க:

ரஞ்சனி & காயத்ரி:

டி.கே.பட்டம்மாள்:

மகாராஜபுரம் சந்தானம்:

விஜய் சிவா:

மாண்டலின் ஸ்ரீநிவாஸ்:

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

ஒரு காலைத் தூக்கியது ஏன்?

இயற்றியவர்: மாரிமுத்தாப்பிள்ளை

இராகம் : தோடி / விளரிப்பாலை

தாளம் : ஆதி

பல்லவி:

எந்நேரமும் ஒரு காலைத் தூக்கிக்

கொண்டிருக்கின்ற வகை ஏதையா?

அனுபல்லவி:

பொன்னாடர் போற்றும் தில்லை

…..நன்னாடர் ஏத்தும் தில்லை

பொன்னம்பல வாணரே

…..இன்னும் தானும் ஊன்றாமல்

(எந்நேரமும் ஒரு…)

சரணம்:

எக்கிய நெருப்பவிக்கத் தக்கன் வீட்டில் நடந்தோ?

….எமனை உதைத்த போதில் எதிர் சுளுக்கேறி நொந்தோ?

சிக்கனவே பிடித்து சந்திரனை நிலத்தில் தேய்த்த போதிலுரைந்தோ?

….உக்கிர சாமுண்டியுடன் வாதுக்காடியசைந்தோ?

உண்ட நஞ்சு உடம்பெங்கும்

…..ஊறிக் கால் வழி வந்தோ

தக்க புலி பாம்பிரு வாக்கும் கூத்தாடியாடி

….சலித்துத்தானோ பொற்பாதம் வலித்துத்தானோ தேவரீர்

(எந்நேரமும் ஒரு…)

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

தேனும் பாலும் போலே

இசை கேட்பது மட்டும் அல்ல, அதையும் தாண்டி உணர்வது!சில நாட்களுக்கு முன் புல்லாங்குழல் இசையில் மகராஜா சுவாதி திருநாள் இயற்றிய “தேவ தேவ கலயாமி” என்று தொடங்கும் சமஸ்கிருத பாடலைக் கேட்டுக்கொண்டு இருக்கையில் அதே போல அமைந்த தமிழ்ப் பாடலை கேட்கும் உணர்வு ஏற்பட்டது தற்செயலா அல்லது இயற்கையா?

பாடுபவர் : கே.ஜே.ஜேசுதாஸ்

இரண்டு பாடல்களின் இராகமும் ஒன்றேயாக அமைந்தது அப்பாடல்களின் வடிவமைப்பின் ஒற்றுமையா? அல்லது மாயாமாளவ கௌளை இராக சொரூபமா? இசைக் கருவியில் கேட்டதன் விளைவா? வாய்ப் பாட்டினை விட இசைக் கருவியில் இழைந்தோடும் இசை இன்னும் இனிதா? “உடல் பொருள் ஆனந்தி” நாவலில் ஜாவர் சீதாராமன் இந்த இராகத்தின் உருக்கத்தினை விவரித்ததாக நினைவிருக்கிறது.

வாசிப்பவர்: புல்லாங்குழலில் சஷாங்க் சுப்ரமணியம்

இப்பாடலில் சரணம் முடிந்து பல்லவி தொடங்கும் இடங்களில் கோபால கிருஷ்ண பாரதி இயற்றிய “சிவலோக நாதனை சேவித்திடுவோம் வாரீர்” என்னும் பாடலை ஒத்து இருப்பது தெரிந்தது.

குறிப்பாக,

தேனும் பாலும் போலே சென்று – தேரடியில் நின்று கொண்டு

சிவலோக நாதனை சேவித்திடுவோம் வாரீர்

என்கிற வரிகள் “தேவ தேவ கலயாமி” பாடலில் இல்லாவிட்டாலும் இருப்பதுபோல உணர முடிந்தது.

பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்

தியாகராகரின் “துளசி தளமுலசே” பாடலை எம்.எஸ் அம்மா பாடிக் கேட்கையில் அதே உணர்வுகள் நீடிப்பது தெரிகிறது.

இதே பாடலைப் போலவே அமைந்த திரைப்பாடல் ஒன்று பட்டினத்தார் படத்தில் இருந்து: (நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ)இது போல பல திரைப்பட பாடல்கள் இந்த இராகத்தில் இருந்தாலும் “இராம நாமம் ஒரு வேதமே” பாடலோடு நிறைவு செய்திட

நினைவில் இராமன் அன்றி வேறில்லாமல் நிறைவு பெறுவதே இலக்கு.

பின்னூட்டமொன்றை இடுக

Filed under மாயாமாளவ கௌளை

ஆதித்தன் பெருமை

சௌரம் – ஒரு மதம் என்று சொல்லப்படும் அளவிற்கு அன்று சூரிய வழிபாடு மிகவும் பிரபலமாக இருந்தது. கலிங்கத்தின் கட்டிடக் கலையின் உச்சம் என சொல்லப்படும் கொனார்க் சூரிய கோவில் இன்றும் அதை நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.சூரிய குடும்பத்திற்கும், அதில் உயிர்கள் வசிக்கும் ஒரே கிரகமான பூமிக்கும் இன்றியமையாதது ஆதவன் என்பதனை எடுத்துரைப்பதாய் இருக்கிறது சூரிய வழிபாடு.

இராம-இராவண யுத்தத்தின் போது, வெற்றி-தோல்வி இல்லாது முடிந்த ஒரு மாலைப் பொழுதில் அகத்திய மாமுனி இராமனை அணுகி, “ஆதித்ய ஹிருதயம்” எனும் ஆதித்தன் துதியை எடுத்து இயம்பினார். இத்துதியானதை ஓதுவோருக்கு மனச் சோர்வையும் நோய்களையும் போக்கி உடலுக்கு சக்தி தரும் அருமருந்தாகச் சொன்னர்.  இதனில் சூரிய பகவான் தான் – பிரம்ம தேவன்; விஷ்ணு; ருத்ரன்; சண்முகன்; பிரஜாபதி தேவன்; தேவேந்திரன்; குபேரன்; காலன்; தர்மராஜன்; சந்திரன்; வருணதேவன் – என்றெல்லாம் வர்ணனை செய்யப்படுகிறது. இப்படி எல்லாமுமான பரம்பொருள் என்பது எல்லாமும் அடங்கிய சர்குண பிரம்மம் ஆகையால் – சூரியனை வழிபடுவது என்பதை பரம்பொருளைத் துதிப்பது போலாகிறது.

யோகாசனங்களில் பெரிதும் அவசியாமான ஒன்றாக கருத்தப்படும் “சூரிய நமஸ்காரம்” – உடலில் உள்ள நச்சுகளை அகற்றும் அரும்பயிற்சியாகக் கருதப்படுகிறது. மேலும் நவக்கிரகங்களில் சூரியனையும் ஒரு கிரகமாக சேர்க்கப்படுவதன் காரணம் தீமைகளை அழித்து நன்மைகளை நாட்டுவதே ஆகும்.

முத்துசாமி தீக்ஷிதரின் பாடல்களில் – சூரியன் மற்றும் இதர கிரகங்களையும் சேர்த்து மொத்தம் ஒன்பது உருப்படிகள் செய்திருக்கிறார். இவையாவன:

சூர்ய மூர்த்தே (சௌராஷ்டிரம்)

சந்தரம் பஜ மானஸ (அசாவேரி)

அங்காரகம் (சுரடி)

புதம் ஆஸ்ரயாமி (நாட்டைகுறிஞ்சி)

பிரகஸ்பதே (அடாணா)

ஸ்ரீசுக்ரபகவந்தம் (பரஜூ)

திவாகரதனுஜம் (யதுகுலகாம்போதி)

ஸ்மராம்யகம் (ரமாமனோஹரி)

மஹாசுரம் (சாமர)

இந்த ஒன்பது கீர்த்தனைகளில் அந்தந்த கிரகங்களில் சிறப்புகளும், ஜோசிய சாஸ்திரம் தொடர்பான நுட்பங்களையும், அவற்றுக்கான மந்திரங்களின் பெருமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சூர்ய மூர்த்தே 

இராகம் : சௌராஷ்டிரம் (சூர்யகாந்தம் ஜன்யம்)

தாளம்: த்ருவம்

பல்லவி

ஸூர்ய மூர்தே நமோऽஸ்து தே

ஸுந்த3ர சா2யாதி4பதே

அனுபல்லவி

கார்ய காரணாத்மக ஜக3த்ப்ரகாஸ1 –

ஸிம்ஹ ராஸ்1யதி4பதே

(மத்4யம கால ஸாஹித்யம்)

ஆர்ய வினுத தேஜ:ஸ்பூ2ர்தே

ஆரோக்3யாதி3 ப2லத3 கீர்தே

சரணம்

ஸாரஸ மித்ர மித்ர பா4னோ

ஸஹஸ்ர கிரண கர்ண ஸூனோ

க்ரூர பாப ஹர க்ரு2ஸா1னோ

கு3ரு கு3ஹ மோதி3த ஸ்வபா4னோ

ஸூரி ஜனேடி3த ஸு-தி3னமணே

ஸோமாதி3 க்3ரஹ ஸி1கா2மணே

தீ4ரார்சித கர்ம ஸாக்ஷிணே

தி3வ்ய-தர ஸப்தாஸ்1வ ரதி2னே

(மத்4யம கால ஸாஹித்யம்)

ஸௌராஷ்டார்ண மந்த்ராத்மனே

ஸௌவர்ண ஸ்வரூபாத்மனே

பா4ரதீஸ1 ஹரி ஹராத்மனே

பு4க்தி முக்தி விதரணாத்மனே
பாடற்பொருள்

சூரிய மூர்த்தியே – சாயா தேவியின் பதியே!

எல்லா காரியங்களுக்கும் காரணமாகத் திகழ்பவனே!

உலகங்கெளெல்லாம் ஒளிகொண்டுத் திகழச்செய்பவனே!

சிம்மராசியின் அதிபதியே!

உடலக்கு அழகையும் பலத்தையும் ஆரோக்யத்தையும் கொடுப்பவனே!

தாமரையை மலரச் செய்பவனே! (இதய தாமரையையும்)

கர்ணனின் தந்தையே!

கொடிய பாவங்களையும் வதைத்து காப்பவனே!

சந்திரன் முதலான கோள்களை ஆள்பவனே!

நடக்கும் எல்லா செயல்களுக்கும் சாட்சியாய் இருப்பவனே!

அழகான ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் செல்பவனே!

எட்டெழுத்து ஸ்வர மந்திரமாகத் திகழ்பவனே!

தங்க ஒளியாத் திகழ்பவனே!

பிரம்மா, திருமால் மற்றும் சிவன் போன்றவனே!

பொருளையும் அருளையும் ஒருசேரத் தருபவனே!

இப்பாடலை அருணா சாய்ராம் அவர்கள், ஆதித்ய ஹிருதயத்தினை விருத்தமாகப் பாடியபின் பாடிட இங்கு கேட்கலாம்:

பின்னூட்டமொன்றை இடுக

Filed under சௌராஷ்டிரம்