டிசம்பர் 2008 லிருந்து வரும் பதிவுகள்

டிசம்பர் 23, 2008

பாலமுரளி சார் பாட்டு!

இந்த இடுகையில் நாம பார்க்கப்போகிற பாடல், டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா அவர்களால் பாடப்பட்டு பிரபலமான பாடல். அவரது சொந்த சாகித்யம் எனச் சொல்லப்படுகிறது(…?!).
அன்பர் ஒருவர், இந்தப் பாடலை இங்கு தரும்படி கேட்டிருந்தார். அவர் கேட்டபின்புதான், அவர் உதவியால் இந்த பாடலை அறிந்து கொண்டேன். ஆகையால், அவருக்கு முதற்கண் நன்றிகள்.
இராகம் : சாருகேசி
தாளம் : ஆதி
எடுப்பு
துணை நீயே, என்றும் துணை நீயே குமரா – என்
வினை தீர்த்தருள்வாயே முருகா.
தொடுப்பு
பார்தனில் துயரங்கள் நீக்கிடவே பலப்பல விந்தையும் புரிந்தனையே
கார்முகில் வண்ணன் மருகோனே, [...]