பெப்ரவரி 1, 2008...1:12 மாலை

திரை இசையில் தர்பாரி கானடா

மறுமொழிகளுக்குச் செல்க

கல்யாணத் தேன் நிலா / கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா / மௌனம் சம்மதம்

மலரே மௌனமா / எஸ்.பி.பாலா, எஸ்.ஜானகி / கர்ணா

நீ காற்று / ஹரிஹரன் / நிலாவே வா

ஆகாய வெண்ணிலாவே / கே.ஜே.ஜேசுதாஸ் / அறங்கேற்ற வேளை

ஒரே மனம் ஒரே குணம் / ஹரிஹரன், சாதனா சர்கம் / வில்லன்

ஹிந்துஸ்தானியில் புகழ்பெற்ற இந்த ராகம், அக்பரின் அரசவையில் இசைக் கலைஞர் தான்சேனால் தென் இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப் பட்டது என்பார்கள். அக்பரின் அரசைவையில் பெருமிதத்துடன் இசைக்கப்பட்ட ராகமாதலால் ‘தர்பாரி’ கனடா எனப் பெயர் பெற்றது போலும்.

சின்னஞ்சிறிய வண்ணப் பறவை போல் சாந்தமும், அமைதியும் தரவல்லதான இந்த ராகத்தில் அமைக்கப்பட்ட பாடல்கள் தமிழ்த் திரை இசையில் இன்னும் நிறைய உண்டு. உங்களுக்கு தெரிந்தவற்றை எடுத்து விடுங்களேன்…!

3 மறுமொழிகள்

  • முக்கியமான திரைப்படத்தில் வந்த பாட்டை விட்டு விட்டீர்கள். சிந்து பைரவியில் வரும் ‘ பூ மாலை வாங்கி வந்தேன், பூக்கள் இல்லையே!!’ K.J.யேசுதாஸ் பாடியது.

  • வாங்க ஸ்ரீவித்யா, ‘பூ மாலை வாங்கி வந்தான்…’ கானடா அல்லவா – தர்பார் இல்லாத கானடா!

  • மணிரத்னம் படமான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் வருமே…”ஒரு தெய்வம் தந்த பூவே….” பாடல், அதுகூட தர்பாரி கானடா என்று நினைக்கிறேன்.

    வெற்றிவிழா படத்தில் வந்த ‘மாருகோ மாருகோ மாருகயி, ஜோருகோ ஜோருகோ ஜோருகயி’ பாடலை, ‘சதி லீலாவதி’ படத்தில் கமல் (கோவை சரளாவுடன் காமெடியாக) பாடுவாரே.. அது தர்பாரி ராகம் தான்.

    ”சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா..
    அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதைச் சொல்லுதம்மா..” பாடல்தான் தர்பாரிகானடாவில் தமிழ் திரையில் வந்த எனக்குப் பிடித்தபாடல்.

    பதிவுக்கு நன்றி.


மறுமொழி இடுக