ஜேசுதாஸ் பாடி முதல் முறை கேட்ட பாடல்.
அவள் அருள் வேண்டி நின்று பாடிடத் தோணுது.
தாயே என் சரஸ்வதி – கலை
ஞானம் அருள்வாயே…
(தாயே…)
மாயே என் கலைவாணி – சேய்
என்பால் கனிவாய்…
(தாயே…)
தாயே என் குறை தீர – நாவில்
நீ அமர வேண்டும் – நாவால்
உன் புகழ் பாடி – பாமாலை
சூட்ட வேண்டும்…
(தாயே…)
ஆகமங்கள் கூறுகின்ற ஆத்ம
சுகம் நான் பெறவே…
இராக தாள சந்தி சேர்த்து
தூய கானம் பாடிடவே…
யேக நாத ரூபிணி…
நாசிகாபூஷிணி…
தாகம் தீர்ப்பாய் கலைமகளே
வரம் யாவும் தருவாயே…
(தாயே…)
2 மறுமொழிகள்
3:33 காலை இல் டிசம்பர் 30, 2006
வணக்கம்.
வாணியைத் தொழுபவர்கள் என் வணக்கத்துக்கு மிகவும் உகந்தவர்கள்.
உங்கள் பதிவுகளுக்கு இப்போதுதான் வந்தேன்.
தொடரட்டும் உங்கள் பணி.
ஒரு வேண்டுகோள்.
“கலைமகளே அருள் புரிவாய்
கவி மழை பொழி ஒரு முகியே…”
என்ற தோடி ராக கீதத்தை வெகு நாட்கள் முன்பு கேட்டிருக்கிறேன். அதன் வரிகள் உங்களுக்கு கிடைக்குமா?
நன்றி
4:19 காலை இல் டிசம்பர் 30, 2006
ஓகை சார் வருக, அந்த பாடலை கேட்க நேரிட்டதில்லை…
கூகிளில் தேடியதில் ஏதும் கிட்டவில்லை, ஆனால் நம் குமரனாரின் கலைமகள் மாலை ப்ளாக் கிடைக்கப்பெற்றேன்:
http://sakalakalavalli.blogspot.com/